ஒரு வருசமாவே இந்த பேர் ரொம்ப அடிபடுது. சூர்யா ரசிகர்கள் யப்படா யப்படா நு காத்து கிடந்தாங்க. ஒரு வழியா பாடல்கள் ரிலீஸ் பண்ணிட்டாங்க
ஆனா இந்த 6 பாட்ட ரிலீஸ் பண்ண 3 தடவை தேதி மாத்திட்டாங்க அப்புறம் இது பாடல் விமர்சனம் இல்ல படத்தை பத்தின கண்ணோட்டம்
முதல்ல பாடல்கள்
சர்க்கஸ் கலைஞரா ஒரு கேரக்டர் இருக்குது
ஒ ரிங்கா ரிங்கா:இந்த பாட்டு சூர்யா அறிமுகப்பாடல் ஓபனிங் ல சுசித்ரா குரல் அப்புறம் போகப்போகப் பாடல் சூடு பிடிக்கிது. செம குத்து..என்ன ஹாரிஸ் போட்ட பிட்ட திருப்பி திருப்பி போடுறது லைட் ஆ தெரிது
அப்புறம் யம்மா யம்மா காதல் பொன்னம்மா பாடல் லிரிக்ஸ் அருமை கபிலன் தனியா தெரியுறார் மியூசிக் அஞ்சல பாட்ட ஞாபக படுத்தினாலும் அதிகமா இல்ல பாட்டு சூப்பர்
அப்புறம் எல்லலேம்மா பாடல் அயன் ஓ ஆயியே பாடல ஞாபக படுத்தினாலும் போக போக மெட்டு மாறி நல்லா இருக்கு
முன் அந்தி சாரல் பாட்டு அதிக சிரமப்படாம மேலோடி குடுத்துட்டார்
சைனிஸ் பாடு லிரிக்ஸ் நெட்ல படிச்சன் புது மனிதன் வந்து அங்குள்ள மக்களை காப்பாற்றுவது பற்றி நல்ல இருக்கு
இன்னும் என்ன தோழா பையு ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட வைக்கும் அப்டின்னு முருகதாஸ் சொல்லிருக்கார் பாக்கலாம்.
சூர்யா எவ்ளோ கேரக்டர் நு தெரில ஆனா போதி தர்மன் அப்டின்னு ஒரு கேரக்டர் இருக்குதாம் அத பத்தி தெரியணும்னா இந்த
லிங்க் அமுக்குங்க....!
நாடோடிகள், ஈசன் படங்களில் நடிப்பில் கவர்ந்த அபிநயா, சூர்யாவின் ஜோடியாகியுள்ளார் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் ஏழாம் அறிவு படத்தில்.
முதலில் இந்த விஷயத்தையே வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டும். படம் வெளியானதும் ஒரு சர்ப்ரைசாக இருக்கட்டுமே என்று முருகதாஸ் கூறியிருந்தாராம். ஆனால் இப்போது விஷயம் வெளியாகிவிட்டது.
ஏழாம் அறிவில் சூர்யாவுக்கு மெயின் ஜோடி ஸ்ருதிதான் என்றாலும், ப்ளாஷ் பேக்கில் சரித்திரப் பின்னணியில் வரும் சூர்யாவுக்கு அபிநயாதான் ஜோடியாம்.
படத்தில் மிக முக்கிய அம்சமே இந்த ப்ளாஷ்பேக் சூர்யாதான் என்பதால், அபிநயா கேரக்டருக்கு முக்கியத்துவம் அதிகம் என்கிறார்கள்.
முருக தாஸ் சொன்னத கொஞ்சம் படிங்க....
7ஆம் அறிவு'ங்கிறது அதீத கற்பனை இல்லை! - ஏ.ஆர்.முருகதாஸ்
நடிகர்களின் பரிணாமம் அவர்களின் படத் தேர்விலும், ஏற்கும் கதாபாத்திரத்தின் பொருட்டும் அமைகிறது எனலாம். அப்படி பாலாவின் 'நந்தா'வில் தன்னைப் புனரமைத்துக் கொண்ட சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸின் 'கஜினி'யில் ஒரு பயண எல்லையைத் தொட்டார். இந்தி வரை ஓங்கி ஒலித்த 'கஜினி'யின் புகழ் கவனத்திலிருந்து மறைவதற்குள், சூர்யாவின் அடுத்த மைல்கல்லையும் ஏ.ஆர்.முருகதாஸே வடித்துக் கொடுத்திருக்கிறார். ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் அமைந்த '7ஆம் அறிவு', சூர்யாவின் அடுத்த பரிணாமத்தின் சாட்சியாக அமையவிருக்கிறது. படத்தின் பாடல்கள் வழக்கமான சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ், ஹாரிஸ் ஜெயராஜின் கூட்டணியில் இசை ரசிகர்களின் காதுகளை இன்னும் சில காலத்துக்கு குத்தகை எடுக்கும் அவசரத்தில் இருக்க, படத்தின் பாடல் வெளியீட்டுக்கான வேலைகளுக்கிடையே நம்மிடையே பேசினார் ஏ.ஆர்.முருகதாஸ்.
2000 ஆண்டுகளை உள்ளே தக்கவச்சிருக்க உயிர்ப்பான வரலாற்றுப் பின்னணி கொண்ட கதை இது. இன்னொரு பக்கம் வளர்ந்த அறிவியல் அமைப்புடன் கூடிய தற்காலமும் கைகோர்க்குது. மனித அறிவின் ஆறு நிலைகளைத் தாண்டி ஏழாவது அறிவும் சாத்தியமேங்கிற உண்மையை வரலாறும், அறிவியலும் கலந்து சொல்லியிருக்கேன். '7ஆம் அறிவு'ங்கிறது புதுமைக்காக சொல்லப்பட்ட அதீத கற்பனை இல்லை. இது மனிதனால் முடிகிற விந்தைதான்ங்கிறதை இரு வேறு காலகட்டத்தில பயணிச்சு சொல்லியிருக்கேன். இதுக்காக தயாராக பல அறிவியல் உண்மைகளுக்கான ஆராய்ச்சி தேவைப்பட்டது. எல்லாத்திலும் புகுந்து வெளியே வந்து தயாரானதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
7ஆம் அறிவு'ங்கிறது மனிதனின் அடுத்த ஆச்சரிய நிலை. அந்த நிலையில் அமையுது சூர்யாவின் பாத்திரம். இதில் தமிழகத்தோட.... தமிழனோட பெருமையும் அடிநாதமா இருக்கு....
சூர்யாவுக்கு ஏகப்பட்ட கெட்டப்புகள் இருக்கு போலிருக்கே....?
"பார்வைக்கு அப்படித் தெரியும். ஆனா கதைப்படி ரெண்டுதான். வெளியான படங்கள்ல கடந்தகால அரசனா ஒரு தோற்றத்தோட வர்ற சூர்யாவோட வாழ்க்கையின் இறுதி வடிவம்தான் துறவி கெட்டப். இதோட நவீன தோற்றத்தில கலர்ஃபுல் சூர்யா. படத்தில மேற்கொள்ள வேண்டிய சவால்களுக்காக நிறையவே தயாரானார் அவர். உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகள் மூலம் உடலை கட்டுக்கோப்பா மாற்றியது ஒரு புறம், மார்ஷியல் ஆர்ட்ஸ்ங்கிற தற்காப்புக் கலைகளுக்காக வியட்நாம் போய் தங்கியிருந்து கற்றுத் தேர்ந்து வந்தது இன்னொரு பக்கம்னா, இதெல்லாம் தெரியாத அடுத்த பக்கமும் ஒண்ணு இருக்கு. அது சர்க்கஸ் நுட்பங்கள். அதுக்காகவும் சர்க்கஸ் வித்தைகளுக்குத் தனியா பயிற்சி எடுத்தார்.
இதெல்லாம் சூர்யாவோட பயணத்தில அடுத்தக்கட்ட சவால்கள்னு சொல்லலாம். அவரைத்தாண்டி படத்தில் சம்பந்தப்பட்ட எல்லாருக்குமே அடுத்தகட்ட முயற்சின்னும் சொல்லலாம். ஏன்னா என்னைப் பொறுத்தவரை, என்னோட அடுத்தடுத்த முயற்சிகள்ல அடுத்த கட்டத்தை நோக்கிப் போய்க்கிட்டே இருக்க விரும்புவேன். அதுல சிறப்பானதையும் கொடுக்க நினைக்கிறேன்....!
ஸ்ருதி ஹாசன், அபிநயா பற்றிச் சொல்லுங்க...?
அபிநயாவுக்கு சின்னதா ஒரு சிறப்புக் கேரக்டர். மற்றபடி ஸ்ருதிதான் ஹீரோயின். இதில விஞ்ஞானியா வர்ற ஸ்ருதி இந்தப் படத்திலேர்ந்து தமிழ்ல கவனிக்கப்படும் ஹீரோயினா இருப்பாங்க. கதை என்ன கேட்டதோ, கேரக்டருக்கு எது தேவையோ... அதைத் தயங்காம செய்திருக்காங்க ஸ்ருதி....!
படத்துக்காக சீனா போனீங்க இல்லயா...?
ஆமா... அங்கே 'ஷாவ்லின் டெம்பிள்'ல படம் பிடிச்சது மறக்கமுடியாத தருணம். தமிழைப் பொறுத்தவரை ஷாவ்லின் கோயில்ல படமாக்கப்பட்ட முதல் படம் '7ஆம் அறிவு'. அது மட்டுமல்லாம, சீன கிராமம் ஒண்ணை செட் போட்டுப் படமாக்கியதும் படத்தோட ஹைலைட்கள்ல ஒண்ணு. மதன் கார்க்கி எழுதிய சீனமொழிப் பாடல் ஒண்ணு ஹாரிஸ் இசைல சீக்கிரமே உங்க காதுகளுக்கு வந்து சேரும்...!
தயாரிப்பாளராகவும் ஆகிட்டீங்க... எப்படி இருந்தது தயாரிப்பு அனுபவங்கள்...?
என்னை விட சிறந்த தயாரிப்பாளர், '7ஆம் அறிவு' தயாரிச்ச உதயநிதி ஸ்டாலின்கிறதுதான் உண்மை. இதுல நீங்க கேட்டதுக்கும் பதில் இருக்கு. ஏன்னா ஒரு இயக்குநரா நான் இதுவரை சந்திச்ச தயாரிப்பாளர்கள்ல அவர்தான் பெஸ்ட். அவரைப் போல எதிர்காலத்தில் நானும் ஒரு சிறந்த தயாரிப்பாளராக முடியும்னு நம்பறேன்....!
சூர்யா பேசுனது.....ஆடியோ வெளியீடு...!
தேசிய ஒருமைப்பாடு மாதிரி, இது சினிமா ஒருமைப்பாடு போல. சூர்யா நடித்த 7 ஆம் அறிவு படத்தின் ட்ரெய்லரை நடிகர் தனுஷ்தான் வெளியிட்டார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது மற்றொரு ஹீரோவான ஜெய். (இவரை தோளோடு இறுக்கி பிடித்து தன் நன்றியை தெரிவித்தார் சூர்யா. நீங்க சொன்னா என்ன வேணா செய்வேன் என்றார் ஜெய்) திடீரென்று நிகழ்ச்சியின் பாதியிலிருந்து அஞ்சலியும் சேர்ந்து கொண்டார் ஜெய்யுடன். அப்புறம் என்ன? அதுவரை சொதப்பிக் கொண்டிருந்த அவரது தொகுப்புரையில் அநியாயத்துக்கு பொங்கியது சுவாரஸ்யமும், கிண்டலும். இடையிடையே தங்கள் இருவரை பற்றியும் கிசுகிசு பரப்பும் பிரஸ்சையும் விடவில்லை ஜெய்.
இப்படத்தில் சர்க்கஸ் கலைஞராக நடித்திருக்கிறார் சூர்யா. இன்னொரு கேரக்டர் 1800 Suryaகளில் வாழ்ந்த போதி தர்மராம். இந்த காட்சியை திரையில் காட்டும்போது சூர்யாவின் ஒவ்வொரு நரம்பும் நடித்திருப்பதை அறியமுடிந்தது. சூர்யாவை மேடையில் ஏற்றுவதற்கு முன்பு ஏராளமான பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் ஜெய்யும், சூர்யாவின் தம்பி கார்த்தியும். ஆனால் எவ்வித அலட்டலும் இல்லாமல் முன் படி வழியாகவே மேடை ஏறினார் அவர்.
படத்தில் பங்கு பெற்ற எல்லாருக்கும் நன்றி சொன்னவர், முக்கிய வில்லனாக நடித்திருக்கும் ஹாலிவுட் நடிகர் ஜானி ட்ரிக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இவரை பற்றி சூர்யா சொல்வதற்கு முன்பே அவரது ஃபைட் காட்சிகளை திரையில் ஓடவிட்டிருந்தார்கள். சூர்யா ஜானி பற்றி சொன்னதும் அந்த பிரமிப்பு இன்னும் அதிகரித்தது.
’ஹாலிவுட், சைனீஸ் படங்களில் ஃபைட் செய்யும் வில்லன் ஜானி ட்ரி சிறுவயதிலிருந்தே மார்ஷல் ஆர்ட் கற்றுக் கொண்டவர். இவருடைய தாத்தாதான் இந்த கலையை அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவராம். பாருங்க எப்படிப்பட்டவரிடம் போய் என்னை கோர்த்துவிட்டிருக்கிறார் முருகதாஸ் என்று?. ஒவ்வொரு நாளும் அவர் சம்பந்தப்பட்ட ஷுட்டிங் முடிஞ்சாலும் இரண்டு மணி நேரம் மூணு மணி நேரம் இருந்து எனக்கு சொல்லிக் கொடுத்துவிட்டுதான் ரெஸ்ட் எடுக்கப் போவார்’
’இதுக்கு முன்னாடி நான் நடிச்ச படங்களில் பல வேறொரு ஹீரோவிடம் போய்விட்டு அவர்கள் மறுத்த பின்புதான் என்னிடம் வந்திருக்கின்றன. ஆனால் இந்த படம் எனக்கு நேரடியாக வந்த படம். அதுதான் எனக்கு பெரிய சந்தோஷம். என்னுடைய ரசிகர்கள் என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அதற்காகதான் நான் கடுமையாக உழைக்கிறேன்’ என்றார்
அப்புறம் 7 ஆம் அறிவு பாடல்கள் டவுன்லோட் லிங்க்க்கும் கீழ குடுத்துருக்கன்.
பாடல்களுக்கு நன்றி...
ReplyDelete